ஊக்கக் கவிதைகள் /மோட்டிவேஷனல் கவிதைகள் - Tamil Motivational Kavithaigal
🌟 என் ஊக்கக் கவிதைக்கு முன்னுரை
வாழ்க்கை என்பது சவால்களாலும் சோதனைகளாலும் நிரம்பிய ஒரு பயணம். ஆனால் அந்தப் பாதையில் விழுந்தாலும் மீண்டும் எழுவதற்கான வலிமை நம் உள்ளத்திலே தான் உள்ளது. அந்த ஆற்றலை நினைவூட்டும் விதமாகவே, நான் எழுதிய இந்த ஊக்கக் கவிதை உருவாகியுள்ளது.
இந்தக் கவிதை உங்கள் மனதில் நம்பிக்கையையும், உறுதியையும், வெற்றிக்கான தீவிர விருப்பத்தையும் விதைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. 🌸
![]() |
| மோட்டிவேஷனல் கவிதைகள் |
Read powerful Tamil motivational kavithaigal that inspire confidence, hope, and positivity in life. Perfect poems to uplift your spirit.
Read More தமிழ் காதல் புதுக்கவிதைகள்
📜 Copyright Notice
© 2025 [BHAVANI SUNDARESAN]. இந்தக் கவிதை முழுமையாக [BHAVANI SUNDARESAN / LOVELY TAMIL HUB] அவர்களால் எழுதப்பட்ட அசல் படைப்பு ஆகும். எழுத்தாளர் எழுத்து அனுமதி இன்றி இதனை முழுமையாகவோ, பகுதியளவிலோ நகலெடுக்க, வெளியிட, மறுபதிப்பிக்க அல்லது வணிக நோக்கத்தில் பயன்படுத்தக் கூடாது.
© 2025 [BHAVANI SUNDARESAN]. This poem is an original work authored by [BHAVANI SUNDARESAN / LOVELY TAMIL HUB]. No part of this poem may be copied, reproduced, republished, or used for commercial purposes without the prior written permission of the author.
வெற்றி Vs தோல்வி
வெற்றி என்ற சொல்
மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
தோல்வி என்ற சொல்
நல்ல படிப்பினையைக் கொடுக்கும்.
வெற்றி என்பது படியின்
கடைசிப் படி.
தோல்வி என்பது படியின்
முதல் படி.
நீ முயன்று ஏறிவிடு...
அந்த கடைசிப் படியும்
உன் காலடியில் தான்!
சொன்னாக் கேட்டுக்கோங்க
தோல்வியைத் தலைமீதும்
வெற்றியைக் காலடியிலும்
வைத்தால்
அகங்காரம்
நம்மை தொற்றாது!
பூஜ்ஜியம்
ஒரு எண்ணின் முன்னால்
இருக்கும் போது மதிப்பில்லை...
அதுவே
ஒரு எண்ணின் பின்னால் இருந்தால்
அந்த எண்ணின் மதிப்பு கூடும்...
அது போல
நீயும் ஒருவரின் வெற்றிக்கு
பின்னால் நின்று உதவி செய்...
அவரின் மதிப்பு உயரும்போது
உன் மதிப்பு தானே உயரும்...
புதுப்பித்துக் கொள்
நேரம் நிற்காது நமக்காக
காலம் நிற்காது நமக்காக
புதுமை மட்டுமே
ஒவ்வொரு நாளும் கூடும்.
நாமும் நம்மை புதுப்பித்துக்
கொள்வோம்... இல்லையெனில்
நம்மை விட்டுவிட்டு காலம், நேரம்
கடந்துவிடும்.
வெற்றி
புது உலகம் படைப்போம்
ஆண்கள் வேண்டாம் வட்டிக்கு
வாழ்வுக் கொடுக்க...
பெண்கள் வேண்டாம் கைநீட்டி
தட்சணைக் கொடுக்க...
இரு மனம் இணைய வேண்டும்
புதுமையாய்...
இனிமையாய்...
பணக்காரர்கள் வேண்டாம்
சுருட்டித் தின்பதற்கு...
ஏழைகள் வேண்டாம்
கைக்கட்டி உழைத்து
கைநீட்டி நிற்பதற்கு...
சோம்பேறிகள் வேண்டாம்
வீண் கதைப் பேசுவதற்கு...
நல்ல மனிதநேயம் வேண்டும்
இனிமையாய்...
வளமையாய் வாழ்வதற்கு...
ஆட்சி வேண்டும் ஆள
ஆனால்
சுரண்டுவதற்கு அல்ல...
சட்டங்கள் வேண்டும்
மக்களைப் பாதுகாக்கவே அன்றி
உரிமைகளை சாகடிக்க அல்ல...
அந்த
நல்ல நாள் எங்கே?
புது உலகம் எங்கே?
அன்று
நாடும் முன்னேறும்...
மக்களும் முன்னேறுவர்...
(அதற்கு அனைவரும் உழைப்போம்)
வெற்றி - தோல்வி
வெற்றி - தோல்வி
வாழ்க்கையில் சகஜம்
வென்று பார்த்திடு தோல்வியை நீ
வெற்றி என்பது தொலைவில் இல்லை
தோல்வி என்பது நிரந்தரம் இல்லை
தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே
வெற்றியைக் கண்டு மயக்கம்
கொள்ளாதே
தோல்வியை நீயும் தோற்கடித்தால்
வெற்றி என்னும் கனி கிட்டும்
தோல்வியைக் கண்டு அஞ்சினால்
வெற்றி என்றும் எட்டா கனி!
Read More தமிழ் காதல் புதுக்கவிதைகள்
அப்படியா?
கனவு காணும் அனைவரும்
அப்துல்கலாம் ஆவதில்லை...
போதனை செய்பவர் அனைவரும்
புத்தர் ஆவதும் இல்லை...
முயற்சி செய்யாதவன்
வென்றதும் இல்லை...
தன்னம்பிக்கை இல்லாதவன்
சாதனையாளன் ஆவதும் இல்லை...
முயன்று கொண்டே இரு...
வெற்றி கிடைக்கும் வரை....
காலம்
நீ
துரத்துகிறாய்
என தெரிந்தும்
ஓடிக் கொண்டே தான் இருக்கிறேன்!
என் காலம் அடங்கும் போது
நான் அடங்க தானே போகிறேன்...
எது வரை இந்த போராட்டம்...
அது வரை தான் இந்த ஓட்டம்-ஆனால்
இந்த ஓட்டம் வெல்லும் வரை நிற்காது!
ஒளிமயமான எதிர்காலம்
இயற்கை சொல்லி தரும்
பாடங்கள் நிறைய
அதை உற்று நோக்கினால்
புரியும்....நமக்கு
தினம் ஒளிக்கதிர் வீசி எழும்
சூரியனுக்கு தெரியும்
மாலை வந்தால் மறைந்திடுவோம் என்று
ஆனாலும்
காலையில் கதிர்களை
ஒவ்வொருநாளும் அதே
பிராகசத்தோடு எழுந்து வருகிறதே தவிர
ஒரு நாளும் அது தன் வேலையை நிறுத்திடவில்லை...
அது போல உன் வேலையை நீ
இடைவிடாது செய்து வந்தால்
ஒளி மயமான எதிர்காலம்
உன் வாசல் தேடி வரும் நாள்
வெகு தூரமில்லை...!
முயற்சி செய்
என்ன தான் விதையை குழிக்குள் போட்டு
மண்ணால் மூடினாலும்
அது எப்படி மண்ணை பிளந்து வெளியே
வருமோ...
அதுபோல் உன்னை என்ன தான்
மட்டம் தட்டி அலட்சியபடுத்தினாலும்
கலங்காதே!
உனக்கான குறிக்கோளை உன் மனதில்
வைத்து அதற்கான முயற்சியை மட்டும்
செய்து கொண்டேயிரு...
உன்னை ஒருநாள் உலகமே வியந்து
பார்க்கும்...
உன் திறமை அறிந்து!
உன்னை இவ்வுலகில் யார் கைவிட்டாலும்
உன் முயற்சி உன்னை கைவிடாது...
நீயும் கைவிடாதே உன் முயற்சியை...!
-பவானி சுந்தரேசன்
நன்றி !
Read More தமிழ் காதல் புதுக்கவிதைகள்
© 2025 Bhavani Sundaresan | Lovely Tamil Hub. இந்தக் கவிதை எழுத்தாளர் அசல் படைப்பு. அனுமதி இன்றி நகலெடுக்கவும், பகிரவும் கூடாது.
© 2025 Bhavani Sundaresan | Lovely Tamil Hub. All rights reserved. Original poem. Do not copy, reproduce, or republish without permission.
Read More தமிழ் காதல் புதுக்கவிதைகள்
